Surprise Me!

அடுத்து என்ன பரோட்டாவும், சால்னாவும்தான்... சீமான் கலகல- வீடியோ

2018-02-06 2,680 Dailymotion

பக்கோடாவை எப்படி விற்பது என்று காட்டுங்கள் நாங்கள் விற்கிறோம் என்றும் அடுத்தது பரோட்டாவும் சால்னாவும் விற்க சொல்வார்கள் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு பெருகவில்லையே என்ற டிவி சேனல் ஒன்றின்கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்த பிரதமர் மோடி, பக்கோடா விற்றால் கூட நாளொன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கலாம். அது வேலைவாய்ப்பு இல்லை என்பீர்களா என கூறியுள்ளார்.இதுபோல் எம்பியான பிறகு முதல்முறையாக நேற்றைய தினம் லோக்சபாவில் அமித்ஷா பேசினார். அப்போது அவர் கூறுகையில் வேலை இல்லாமல் இருப்பதற்கு பக்கோடா விற்பது எவ்வளவோ மேல் என்று கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு குறித்து கேட்டால் மோடியும், அமித்ஷாவும் பக்கோடா விற்க சொல்வதை கண்டு மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், முதல்ல முன்மாதிரியா பிரதமரும், அமித்ஷாவும் பக்கோடா விற்றுக் காட்டினால் அதை பார்த்து நாமும் கற்றுக் கொண்டு விற்கலாம்.

பக்கோடா விற்பதே நல்ல வேலை என்றால் மோடி ஏன் பிரதமராக இருக்க வேண்டும்?, அமித்ஷா ஏன் ஒரு கட்சியின் அகில இந்திய தலைவராக இருக்க வேண்டும்? இருவரும் பக்கோடா விற்க சென்று விட வேண்டியதுதானே.





Naam Tamilar movement organiser Seeman says that the BJP Government may ask to sell even Parotta and Salna. Amitsha comment that Pakoda business is better than unemployment.