Surprise Me!

ரஜினிக்காக ஒரு வார விரதம் இருந்த ஸ்ரீதேவி!- வீடியோ

2018-02-26 3,288 Dailymotion

ஸ்ரீதேவியின் மரணம் பேதமில்லாமல் அத்தனை ரசிக மனங்களையும் ஒரு உலுக்கு உலுக்கி விட்டது என்றால் மிகையல்ல. சமூக வலைத் தளங்களில் அவர் ரசிகர், இவர் ரசிகர் என்ற பேதமின்றி அவ்வளவு பேரும் உருகித் தவித்துள்ளனர். குறிப்பாக ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஸ்ரீதேவிக்கு தங்கள் மனமார்ந்த அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர். அதற்கு ஒரு தனிப்பட்ட காரணமும் உள்ளது. ரஜினி கடந்த 2011-ம் ஆண்டு உடல் நிலை பாதிக்கப்பட்டார். உயிருக்கே போராடிக் கொண்டிருந்த அவரை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் ரஜினி உடல் நலம் பெற வேண்டி தங்களுக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் பிரார்த்தனை செய்து வந்தனர். அப்போது நடிகை ஸ்ரீதேவி சத்தமின்றி ஒரு பிரார்த்தனை செய்தார் ரஜினிக்காக. ஷிர்டியில் உள்ள சாய்பாபாவுக்கு ஒரு வாரம் விரதமிருந்த ஸ்ரீதேவி, விரத காலம் முடிந்ததும் ஷிர்டி சென்று சாய்பாபாவை தரிசனம் செய்து, ரஜினிக்கு விரைவில் உடல் நலம் பெற வேண்டிக் கொண்டார்.


Rajinikanth's fan's have paid tribute to Sridevi due to her special bond with the actor.