ஈரோட்டில் தனியார் கிளப் மேலாளரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு அடுத்த மூலப்பாளையத்தில் தனியார் கிளப்பில் நடைபெற்று வருகிறது. இதன் மேலாளராக கோபிநாத் என்பவர் பணி புரிந்து வருகிறார்.இந்த நிலையில் இந்த கிளப் முறைகேடாக நடைபெற்று வருவதாகவும் சமூக விரோத செயல்கள் நடத்தி வருவதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியிடுவோம் என்றும் அவ்வாறு வெளியிடாமல் இருக்க ஒரு லட்சம் ரூபாய் த வேண்டும் என இரண்டு பேர் மிரட்டி உள்ளனர்.இதுகுறித்து அந்த கிளப் மேலாளர் கொடுத்த புகாரின் மீது அந்த இரண்டு நிருபர்களை பிடித்து விசாரனை நடத்தியதில் ஈரோடு கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் மற்றும் அருண்குமார் என தெரிய வந்தது. இதில் பரமேஸ்வரன் காவல் துளி என்ற மாத இதழில் பணிபுரியதாகவும் அருண்குமார் அவரது நண்பர் என்றும் ஒரே குடியிருப்பில் வசித்து வருவது தெரிய வந்தது.
இதனையடுத்து போலி நிருபர் பரமேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் அருணகுமார் ஆகிய இருவரையும் தாலுக்கா காவல்துறையினர் கைது செய்தனர்.