Surprise Me!

கைது செய்யப்பட்ட மாணவனை காப்பாற்ற முற்பட்ட சிறீதரனை இலக்கு வைத்த பொலிஸார்

2024-02-04 11,697 Dailymotion

இலங்கையின் சுதந்திரதினத்தை தாயக மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்குகிழக்கில் ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் மீது பொலிஸாரால் அடாவடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
போராட்டத்தை இடைமறித்தது மட்டுமல்லாது பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடுமையான தாக்குதலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அத்தோடு பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையும், தாக்குதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதறன் மீதும் பொலிஸார் தாக்குதலை முன்னெடுத்திருந்தனர்.