Surprise Me!

தஞ்சையில் களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி: பசுக்களுக்கு சிறப்பு வழிபாடு

2025-08-16 20 Dailymotion

தஞ்சாவூர்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பகவான் ஸ்ரீ கண்ணன் கோயிலில் உறியடித்தல், கோ-பூஜை வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பகவானை வழிபாடு செய்தனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையாக கிருஷ்ண ஜெயந்தி விழா திகழ்கிறது. அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம், மேலவீதி தேரடி பகுதியில், பகவான் ஸ்ரீ யாதவ கண்ணன் கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இக்கோயிலின் 24 வது கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ‘கோகுலாஷ்டமி யாதவ கண்ணனின் உறியடி திருவிழா’ கடந்த (ஆக.13) ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட யாதவ கண்ணன் உருவப் படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கண்ணனுக்கு பிடித்தமான சீடை, முறுக்கு, அவல், வெண்ணெய், சுண்டல் ஆகியவை படையலிடப்பட்டு, பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மஹாதீபாராதனையும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, விழாவில் 50-க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு வஸ்திரங்களை சாத்தி, கோ பூஜை வழிபாடும் சிறப்பாக நடைபெற்றது.