Surprise Me!

திருத்தணி கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த அமைச்சர் சேகர் பாபு!

2025-08-16 2 Dailymotion

திருவள்ளூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்ப திருவிழா 5ஆம் நாள் நிகழ்ச்சி ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. 

ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று மூலவர் முருகப் பெருமானுக்கு அதிகாலை ஒரு மணி அளவில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம், வைர ஆபரணம், வைர கிரீடம், சிறப்பு, பச்சை மரகதக்கல் மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  

ஆடி கிருத்திகை நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தனது குடும்பத்துடன் இன்று அதிகாலை கோயிலுக்கு வருகை தந்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானையும், உற்சவர் சண்முகப் பெருமானையும் அவர் தரிசித்தார்.