Surprise Me!

திருத்தணி கோயிலில் காவடி எடுத்து வந்த ரோஜா!

2025-08-18 8 Dailymotion

திருவள்ளூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில் நடிகையும், ஆந்திர முன்னாள் அமைச்சருமான ரோஜா காவடி எடுத்து சாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாக திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. இந்தக் கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா 5 ஆம் நாள் நிகழ்ச்சி கடந்த 14ஆம் தேதி தொடங்கி இன்றுடன் (ஆக.18) முடிவடைய உள்ளது.

இதில் மூன்றாவது நாள் ஆடி கிருத்திகையான நேற்று, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம், வைர ஆபரணம், வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறப்பு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.  

ஆடி கிருத்திகை தினங்களில் ஒவ்வொரு ஆண்டும் ரோஜா காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் ரோஜா விரதம் இருந்து காவடி எடுத்து மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் அவர், இரண்டு கிலோ வெள்ளி வேலினை, காணிக்கையாக செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.