Surprise Me!

டேங்கர் லாரியில் சிக்கிய மின் வயர்கள்! வாகன ஓட்டிகள் பீதி!

2025-08-23 0 Dailymotion

ஆவடி: சென்னையை அடுத்த ஆவடி எப்போதும் பரபரப்பாக இருக்கக் கூடிய பகுதியாகும். அதிலும், ஆவடி 60 அடி சாலை போக்குவரத்துக்கு மிக முக்கியமான சாலை. எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். அந்த சாலையில் வணிக வளாகங்கள், உணவகங்கள், மருத்துவமனை மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. 

இந்நிலையில் நேற்று மதியம் அந்த சாலை வழியாக வந்த டேங்கர் லாரி ஒன்று வேகமாக சாலையை கடந்து சென்றது. அப்போது திடீரென மின் கம்பத்தின் வயர்கள் டேங்கர் லாரியில் சிக்கியது. அதை கவனிக்காத டேங்கர் லாரி ஓட்டுநர் தொடர்ந்து லாரியை வேகமாக இயக்கியுள்ளார். அதனால், மின் கம்பம் கிழே விழுந்தது. அதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களில் வயர்கள் சிக்கியதால் அவற்றை வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களில் இருந்து எடுத்து விட்டு சென்றனர். மேலும் கிழே விழுந்த வயர்கள் மற்றும் மின் கம்பத்தால் அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.