தஞ்சாவூர்: காவல்துறை சார்பில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
தஞ்சை தொழிற்பயிற்சி மைதானத்தில் இருந்து போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் 14 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 5 கிமீ, 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 3 கி.மீ, 12 வயதிற்கு கீழ் உட்பட்டவர்களுக்கு 2 கி.மீ என 3 பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன. இதில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டர்கள்.
இந்த போட்டியில் 5 கிமீ தூர பிரிவில் ஆரோக்கியசாமி என்பவரும், பெண்கள் பிரிவில் கீதாஞ்சலியும் முதல் இடம் பிடித்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மிதிவண்டி மற்றும் பதக்கம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இது போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள், சைபர் குற்றங்களின் ஆபத்து மற்றும் அவற்றை தவிர்ப்பது குறித்த தகவல்களை மக்களுக்கு அளிக்கும் நோக்கில் நடத்தப்படுவதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.