Surprise Me!

வியப்பை ஏற்படுத்தும் அழகிய 2 செ.மீ. விநாயகர் சிலை!

2025-08-28 15 Dailymotion

திருவள்ளூர்: இந்து பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி, நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக, பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியைச் சேர்ந்த நுண்சிற்பி டி.கே. பரணி 2 சென்டிமீட்டர் உயரத்தில் வலம்புரி விநாயகர் மண் சிலையை உருவாகியுள்ளார். 

இந்த சிலை குறித்து பேசிய அவர், “நான் இதுவரை சந்தன மரம், அரிசி ஆகியவைகளில் தத்ரூபமாக விநாயகர் சிலை உருவாக்கி உள்ளேன். தற்போது உருவாக்கப்பட்டுள்ள வலம்புரி விநாயகர் மண் சிலை, விநாயகர் சதுர்த்திக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக விநாயகர் சிலைகள் மண், பிளாஸ்டர் ஆப் பாரீஸ், பிளாஸ்டிக் போன்றவற்றில் உருவாக்கப்படும். ஆனால் நான் வித்தியாசமாக 2 செ.மீ. உயரத்தில் மண்ணாலான வலம்புரி விநாயகர் நுண்சிலையை உருவாக்கியுள்ளேன். இந்த சிலையை சுடுமண் சிலையாக மாற்றி, கண்காட்சியில் வைக்க உள்ளேன். எனது தாத்தா, தந்தை என 3 தலைமுறைகளாக சந்தன மர நுண் சிலைகள் செதுக்கி வருகிறோம். நான் சந்தன மரநுண்சிற்பங்கள், அரிசியில் சிலை செதுக்கி குடியரசுத் தலைவரின் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளேன்” என்றார்.