Surprise Me!

தென்பெண்ணை ஆற்றில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்!

2025-08-29 15 Dailymotion

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறை அனுமதி பெற்று, விநாயகர் சிலை நிறுவி பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். 

இன்று வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி மூன்றாவது நாளை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலம், தொப்பூர் அணை உள்ளிட்ட பகுதிகளிலும், தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையாக உள்ள இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் இரண்டு மாவட்டங்களைச் சார்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் விநாயகர் சிலைகளை கரைக்க கொண்டு வந்தனர். 

தருமபுரி மாவட்ட எல்லையில் தருமபுரி மாவட்ட காவல்துறையினரும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினரும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி தென்பெண்ணை ஆற்றில் பாதுகாப்பாக கரைக்க அறிவுறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் வரும் வாகனங்களை போலீசார் கண்காணித்து ஆற்றுக்குள் அனுமதித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை தென்பெண்ணை ஆற்றில் வைத்து கற்பூர தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தி கரைத்தனர். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி என இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த சிலைகள் தென்பெண்ணை ஆற்றில் கரைத்ததால் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.