Surprise Me!

தஞ்சாவூரில் நிறைவு பெற்றது சதுர்த்தி விழா!

2025-08-30 0 Dailymotion

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த விதவிதமான விநாயகர் சிலைகளை தாரை, தப்பாட்டத்துடன் அப்பகுதி மக்களுடன் வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று வடவாற்றில்  கரைத்து வழிபட்டனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தஞ்சாவூரில் மாநகரில் 51 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் சிவபெருமான் விநாயகர், கம்ப்யூட்டர் விநாயகர் என விதவிதமான வடிவங்களில் இரண்டு அடி முதல் இருபது அடி உயரம் வரையிலான மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் தஞ்சை ரயில் நிலையம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து அனைத்து சிலைகளும் பேண்ட் வாத்தியங்கள், பறை இசை, தப்பாட்டத்துடன் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதில் அப்பகுதி இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக இசைக்கு ஏற்ப குத்தாட்டம் போட்டு வந்தனர். பின்பு அனைத்து சிலைகளும் காவல் துறையினர் பாதுகாப்புடன் தஞ்சை வடவாற்றில் நேற்று இரவு கரைத்து வழிபட்டனர்.

நிகழ்ச்சியில், எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் ஊர்வலம் வந்த சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.