காஞ்சிபுரம்: ஶ்ரீவரசக்தி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சித்தி, புத்தி லக்ஷ்மி தேவியர்களுடன் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது .
விநாயகர் பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேக்குபேட்டை நடுத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீவரசக்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மூலவர் விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று பஞ்சவர்ண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்கர்கள் பங்கேற்று விநாயகரை வழிபட்டு மகா தீபாரதனை காண்பித்து அருள் பெற்றனர். இதனைத் தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவமான விநாயகருக்கு சித்தி, புத்தி லக்ஷ்மிதேவியர்கள் ஒரே மேடையில் அமைத்து திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விநாயகருக்கு சித்தி, புத்தி லக்ஷ்மிதேவியர்களுக்கு மாலை மாற்றி, திருமாங்கல்யம் சாத்தப்பட்டு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண உற்சவத்தை கண்டு மகிழ்ந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.