Surprise Me!

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி! சுற்றுலாப் பயணிகள் வியப்பு!

2025-08-30 5 Dailymotion

திண்டுக்கல்: கொடைக்கானலில் அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அகில இந்திய அளவிலான ஏழாவது நாய்கள் கண்காட்சி எம்.எம்.தெருவில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை சென்னை, சேலம் மற்றும் கொடைக்கானலில் 'கெனைன் சங்கங்கள்' இணைந்து நடத்தி வருகின்றன. 

இந்த கண்காட்சியில் ராட்வீலர், டாபர்மேன், பாக்ஸர், ஜெர்மன் ஷெப்பர்டு, வைன் மரைனர், ரெட்ரீவர், ஆஸ்திரேலியன் செப்பேடு, ராஜபாளையம் சிப்பிப்பாறை, கன்னி, பஸ்மி, கோம்பை, பொம்மனேரியன், பிட்புல், சிஜோஸ், காக்கர் ஸ்பானியல், லேபர் டாக், சுவாவி, ஜெயின்ட் பெர்னாட், பக் உள்ளிட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாடுகளில் இருந்து சுமார் 60 ரகங்களைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டுள்ளன.

இதில் இன்றும் நாளையும் கண்காட்சியில் நாய்கள் பங்கு பெற்று 6 பிரிவுகளாக தகுதிச் சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு உடனடியாக பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும், நாய்களின் பராமரிப்பு, விதிமுறைகள், கீழ்ப்படிதல் ஆகியவற்றின் அடிப்படையில் கண்காட்சியில் பங்கு பெற்ற நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஒட்டு மொத்த சாம்பியன் பட்டங்கள் நாளை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும், ஒரே இடத்தில் பல்வேறு விதமான நாய்களைக் கண்டு சுற்றுலாப் பயணிகள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இக்கண்காட்சி நாளையும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த நிகழ்சியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் தனது செல்ல பிராணியுடன் கலந்து கொண்டுள்ளார்.