Surprise Me!

சாலையில் பைக் வீலிங்... அட்டகாசம் செய்த இளைஞர்கள்: வைலாகும் வீடியோ!

2025-08-31 5 Dailymotion

சென்னை: அம்பத்தூரில் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களின் வீடியோ காட்சி சமூக வளைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.    

சென்னை அடுத்த அம்பத்தூர் பகுதியில் பிரதானமான சாலையாக உள்ளது அம்பத்தூர் - செங்குன்றம் சாலை. இதனை நாள்தோறும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைகளுக்கு செல்பவர்கள், சரக்கு வாகனங்கள், அரசு பேருந்து என எப்பொழுதும் பரபரப்பாக பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் சாலையாக இருந்து வருகிறது.

இந்த பிரதான சாலையில் இளைஞர்கள் சிலர் தங்கள் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை எடுத்து கொண்டு பகல், இரவு நேரங்களில் சட்ட விரோதமாக பைக் ரேஸ், பைக் வீலிங் சாகசம் செய்வது என ஆபத்தான முறையில் அதிவேகமாக சென்று பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.

போக்குவரத்து போலீசார் பணியில் இருக்கும் போதே இது போன்ற சம்பவம் நடப்பதாகவும், ஆனால் அதனை போலீசார் கண்டு கொள்வதில்லை எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.