Surprise Me!

50 முறை சூரிய நமஸ்காரம்: ஆஸ்கார்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற மாணவர்கள்!

2025-09-02 4 Dailymotion

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 144 மாணவர்கள் ஒரே நேரத்தில் 50 முறை சூரிய நமஸ்காரம் செய்து ஆஸ்கார்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய யோகாசன விளையாட்டு சம்மேளனம் (Indian Yogasana Sports Federation) சார்பில், ‘யோகா உலக சாதனை’ நிகழ்வு கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று (செப்.1) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பள்ளியின் முதல்வர் ஜாஸ்பர், இந்திய யோகாசனா விளையாட்டு சம்மேளனத்தின் தேசிய பொது செயலர் அரவிந்த் லட்சுமிநாராயணன், ஆஸ்கார் உலக சாதனை புத்தகத்தின் சர்வதேச தொழில்நுட்ப இயக்குனர் லாவண்யா ஜெயகர், கும்மிடிப்பூண்டி ஸ்ரீ சங்கரி யோகா மைய நிறுவனர் சந்தியா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 144 பள்ளி மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் 50 முறை சூரிய நமஸ்காரம் செய்து சாதனை படைத்தனர். இவர்களது சாதனை ஆஸ்கார்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இறுதியாக, சூரிய நமஸ்காரம் செய்த மாணவர்கள் அனைவருக்கும் உலக சாதனைக்கான சான்றுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. தற்போது இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.