Surprise Me!

ரூபாய் நாணயங்களை விழுங்கிய சிறுமி! சாதுர்யமாக செயல்பட்டு காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!

2025-09-03 2 Dailymotion

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் ரூபாய் நாணயங்களை விழுங்கிய சிறுமியை, மருத்துவர்கள் சாதுர்யமாக காப்பாற்றிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருப்பத்தூர் கோட்டை தெருவைச் சேர்ந்த தில்ஷாத் என்பவரின் இரண்டாவது மகள் நிஸ்பா (7). இவர் திருப்பத்தூர் நகரில் உள்ள பூங்கா அரசு பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை (செப்.2) பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி, தனது வீட்டில் இருந்த 1 ரூபாய் மற்றும் 2 ரூபாய் நாணயங்களை வைத்து விளையாடியுள்ளார். 

அப்போது விளையாட்டுத்தனமாக இரண்டு நாணயங்களையும் சிறுமி வாயில் போட்டுள்ளார். இதில், சிறுமியின் தொண்டையில் நாணயங்கள் சிக்கின. இதனால் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை கவனித்த பெற்றோர், சிறுமியை உடனடியாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் எக்ஸ்ரே பரிசோதனை செய்து பார்த்த போது, நல்வாய்பாக நாணயங்கள், சிறுமியின் உணவு குழாயில் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் சாதுர்யமாக செயல்பட்டு, குழந்தைக்கு மயக்க ஊசி செலுத்தி, அறுவை சிகிச்சை அரங்கில் வைத்து 2 நாணயங்ளையும் வெற்றிகரமாக வெளியே எடுத்து குழந்தையை காப்பாற்றினர். இதனால் மகிழ்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.